
மிளகு, வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமில சுரப்பை அதிகரித்து, முறையான செரிமானத்திற்கு உதவும். மேலும், வயிற்று உபாதை(வலி), வயிற்று உப்புசம், அஜீரண கோளாறு, வாய்வுத் தொல்லை மற்றும் மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் இருக்கும். மேலும் இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், குடல் நோய்களை சரி செய்ய உதவுகிறது.