நம் வாழ்வில் பெரும்பாலான சடங்குகளுக்கும், உணவுக்கும், அழகிற்கும் என அனைத்திலும் மஞ்சள் அங்கம் வகிக்கிறது. தொற்று நோய் உள்ளிட்டவைகளை தடுக்கவும் மஞ்சள் பயனுள்ளதாக இருக்கும். நம் வீட்டின் சமையலறையில் மருத்துவ மூலிகையாக மஞ்சள் திகழ்கிறது. நம் சமையலறை பொருட்களில் மஞ்சளை விட சக்தி வாய்ந்த மூலிகை எதுவும் இல்லை என்று சொன்னால் அது மிகையல்ல. இதில் ஆயுர்வேத பண்புகள் நிறைய உள்ளது.