இந்த வெள்ளை பட்டாணியில் நார்ச்சத்து நிரம்பியிருப்பதால், இது நமது உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. இந்த நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவுகளில் நேர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது. மேலும் இந்த வெள்ளை பட்டாணியில் வைட்டமின் பி, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல வைட்டமின்களும் மற்றும் பல தாதுகளும் இருக்கின்றன. இவை நல்ல கொழுப்பை அதிகரித்து இதயத்திற்கு நன்மை பயக்கிறது